குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு – 2024
தொகைமதிப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நபரும் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்புக்கான தகவலை வழங்கக் கட்டுப்பட்டுள்ளனர், மேலும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமும் அத் தகவலின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்க சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட்டுள்ளது.
பதிவு செய்வதற்கான அறிவுறுத்தல்கள்
e – தொகைமதிப்பில் பதிவு செய்யவதற்குப் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- உங்கள் வீட்டில் தெளிவாக அடையாளம் காணத்தக்க வகையில் இலக்கம் எழுதப்பட்ட தொகைமதிப்பு சிவப்பு லேபல் ஒட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
- ஒரு குடித்தனத்தைக் கொண்ட வீட்டுக்கூறாக மாத்திரம் காணப்படல் வேண்டும்.
(குடித்தனம் எனப்படுவது, ஒரு வீட்டுக்கூறில் ஒன்றாகச் சமைத்து அல்லது உணவு பானங்களைப பகிர்ந்து வாழும் பலரை அல்லது தனியொருவரைக் குறிக்கும்.) - நீங்கள் குடித்தன அங்கத்தவர்கள் அனைவரதும் தகவல்களை வழங்கக் கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும்.
- இவ் வீட்டுக்கூறில் வசிக்கும் குடித்தனம் 2024 டிசம்பர் 31 வரை வசிக்க எதிர்பார்திருப்பின் மாத்திரமே e-தொகைமதிப்பிற்குப் பதிவுசெய்தல் வேண்டும்.
- e-தொகைமதிப்பிற்குப் பதிவு செய்ய முன்னர் தொகைமதிப்புப் படிவத்தையும், அதற்கான அறிவுறுத்தல்களையும் அவசியம் வாசித்தல் வேண்டும். (கீழுள்ள இணப்பின் மூலம் தொகைமதிப்புப் படிவத்தையும், அறிவுறுத்தல்களையும் பெற்றுக் கொள்ளவும்.)